சிறந்த நடிகர், நடிகையாக தனுஷ், திரிஷாவுக்கு விருது

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.

தென்னிந்திய அைனத்துலக திரைப்பட விருதுகள் எனப்படும் ‘பான்டலுன்ஸ் சைமா’ விருதுகள் வழங்கும் விழா கத்தாரில் நடந்தது.

இவ்விழாவில் நான்கு தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த நடிகர் நடிகைகளும் கலந்துகொண்டனர்.

சிறந்த நடிகர், நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனுஷுக்கும் திரிஷாவுக்கும் ‘சைமா’ விருதை மோகன்லால் வழங்கினார்.

திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றாக விளங்குகிறது சைமா (SIIMA) விருதுகள்.

இந்த தென்னிந்திய அைனத்துலகத் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி கத்தாரில் நடைபெற்றது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் என பல பிரிவுகளின் பட்டியலின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ் படங்கள் பல விருது களையும் அள்ளியது பெருமை தரும் தருணமாக அமைந்தது.

இதில் சிறந்த நடிகருக்கான விருது ‘வடசென்னை’ படத்தில் நடித்த தனுசுக்கும் சிறந்த நடிகைக்கான விருது ‘96’ படத்தில் நடித்த திரிஷாவுக்கும் வழங்கப்பட்டன.

ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் சிறந்த நடிகர், நடிகைக்கான விருதை பெற்றனர். தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

சிறந்த படத்துக்கான விருதை ‘பரியேறும் பெருமாள்’ பெற்றது. சிறந்த இயக்குநர் விருது பாண்டிராஜுக்கும் சிறந்த அறிமுக இயக்குனர் விருது நெல்சனுக்கும் சிறந்த அறிமுக நடிகர் விருது தினேசுக்கும் அறிமுக நடிகை விருது ரெய்சாவுக்கும் கிடைத்தன. சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை ஆர்.டி.ராஜசேகர் பெற்றார். விருதுகளை நடிகர் மோகன்லால் வழங்கினார்.

சிறந்த பாடலாசிரியர் விருது விக்னேஷ் சிவனுக்கும் பாடகர் விருது அந்தோணி தாசனுக்கும் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது யோகிபாபுவுக்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத்துக்கும் வழங்கப்பட்டன.

விழாவில் தனுஷ் பேசும்போது, “வடசென்னை படத்துக்காக 2 வருடம் கடுமையாக உழைத்தோம். அதற்கு விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி,” என்றார்.

பான்டலுன் ஸ்டைல் ஐகான் விருதை யஷ், சமந்தா பெற்றனர்.

விழாவில் நடிகர்கள் பிருத்விராஜ், டோவினா தாமஸ், சிவா, நடிகைகள் ராதிகா சரத்குமார், ராய்லட்சுமி, ஸ்ரேயா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாதிஷ்தா, ஜனனி அய்யர், இயக்குநர் வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் விஷ்ணு இந்தூரி, ராஜ்குமார் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

‘அடங்கமறு’ படத்தில் நடித்ததற்காக ஜெயம் ரவிக்கும் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்த அவருடைய மகன் ஆரவ்விற்கும் ஒரே சமயத்தில் சைமா விருது கிடைத்துள்ளது ஜெயம் ரவியின் ரசிகர்களையும் அவரின் குடும்பத்தினரையும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.

அப்பாவும் பிள்ளையும் ஒரே மாதிரியாக ‘கோட் சூட்’ அணிந்த படி மேடை ஏறி பார்வையாளர்கள் அனைவரையும் பரவசப்படுத்தினர். ஒரு அப்பாவுக்கு இதைவிட என்ன பெருமை வேண்டும் என்கிற தருமாக அது அமைந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!