பிரான்ஸ் சைக்கிள் போட்டியில் ஆர்யா

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருள் ஒருவரான ஆர்யா, நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘காப்பான்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. நடிகர் ஆர்யா சினிமாவில் மட்டுமல்லாது சைக்கிள் ஓட்டியாக பல தேசிய சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். 

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார். கடந்த  18ஆம்  தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதிவரை நடைபெறும் இந்த போட்டியின் பந்தய தூரம் 1,200 கிலோ மீட்டர் ஆகும். இந்தப் போட்டியில் நடிகர் ஆர்யா தனது குழுவினருடன் பங்கேற்கிறார்.