குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகும் படத்தில் அதர்வா

குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகும் படத்தில் அதர்வா

1 mins read
d47e14a5-ae35-4889-85dc-2456f12652a3
கண்ணன் இயக்கத்தில் உருவாகும் பெயர் வைக்காத படத்தில் அதவர்வாவுடன் அனுபமா. படம்: ஊடகம் -

கண்ணன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி, கதைக்களத்தை அமைத்துள்ளாராம் கண்ணன். கதைப்படி அதர்வா முனைவர் பட்டம் பெற்ற இளைஞராகவும், கதாநாயகி அனுபமா பரதநாட்டியக் கலைஞராகவும் நடிக்கின்றனர். கடந்த மாத இறுதியில் துவங்கிய முதற்கட்டப் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து அடுத்த சில தினங்களில் அடுத்தகட்ட படபிடிப்பைத் துவங்க உள்ளனர். ஒரு பாடலை மட்டும் வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.