இன்று வெளியாகிறது ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ முதல் பாடல்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. இதில் சிவா ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சூரி, சமுத்திரகனி என்று பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இந்நிலையில் படத்தின் முதல் பாடல் இன்று காலை வெளியாக உள்ளது. இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியீடு காணும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில், பாண்டிராஜின் மகன் அன்புக்கரசு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.
 

Loading...
Load next