திரிஷாவுக்கு உதவிய சேதுபதி

‘கர்ஜனை’ படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. 

அடிதடிக் காட்சிகள் நிறைந்துள்ள இந்த முன்னோட்டத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பாம். 

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். இவரும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்த ‘96’ திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில் ‘கர்ஜனை’ முன்னோட்டத் தொகுப்பை விஜய் சேதுபதி வெளியிட வேண்டும் என திரிஷா கேட்டுக்கொள்ள மறுக்காமல் உதவியுள்ளார் விஜய் சேதுபதி.

சுந்தர் பாலு இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியீடு காண்கிறது.

Loading...
Load next