பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரனுக்காக வருத்தப்பட்ட அமீர்

‘எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான்’ படத்தின் இசை, முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீடு சென்னையில் சிறப்பாக நடை பெற்றது. இதில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், சேரன் போன்ற இயக்குநர்கள் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பது தேவையற்றது என்றார். “ஆட்டோகிராஃப் படத்துக்குப் பிறகு ஓரு தனியார் கல்லூரி விழாவுக்கு சேரன்

வந்தபோது அரங்கில் இருந்த 2 ஆயிரம் பேர் எழுந்து நின்று கைத்தட்டினர். அந்த மரியாதைக்குரிய மனிதரின் நிலைமையைப் பார்க்கும் போது பிக்பாஸ் வீட்டுக் கதவை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வெளியே வரவேண்டும் போல் இருக்கிறது,” என்றார் அமீர்.
 

Loading...
Load next