‘திரில்லர்’ படத்தில் இணையும் ஜோடி

ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. இதுவரை வெளிவந்த ஜெயம் ரவி படங்களிலேயே இந்த ‘கோமாளி’ திரைப்படம்தான் அதிக வசூலைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகிழ்ச்சியில் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில் ஜெயம் ரவி தன் அடுத்த படத்தில் நடிகை டாப்சியுடன் முதல் முறையாக இணைந்துள்ளார்.  

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று அனைத்து மொழிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைத் கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘மிஷன் மங்கள்’ திரைப்படம் இந்தியா முழுவதும் வசூ சாதனை படைத்துள்ளது. 

தொடர்ச்சியாக வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் ஜெயம் ரவியும், டாப்சியும் இயக்குநர் அஹமத் இயக்கும் சண்டை கலந்த காதல் படத்தில் இணைந்துள்ளனர். ‘வாமணன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அஹ்மத். 

இவர் ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ என்று அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். 

இப்படத்தில் இருவரும் இந்திய ரகசிய ஏஜெண்டு களாக நடிக்கிறார்கள். 

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் உள்ள அஸர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இப்படத்திற்கு ‘ஜன ஹன மன’ என்று தலைப்பு வைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.