ஜான்சிராணியாக அனுஷ்கா

சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, சுதீப் உள்ளிட்டவர்கள் நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் அனுஷ்கா சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன. ஆனால், அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ரகசியமாகவே இருந்தது.

இந்நிலையில் படத்தில் அனுஷ்கா, ‘ஜான்சிராணி’ கதாபாத்திரத்தில் நடிப்பதாக சிரஞ்சீவி உறுதி செய்துள்ளார். 

இந்தியாவை ஆட்சி செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட ஜான்சி ராணியின் வீரம் உலகம் அறிந்ததே. இந்த வேடம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் ஒரு முக்கிய பகுதியாக வருவதாகவும் இந்த வேடத்தில்தான் அனுஷ்கா நடித்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இந்த படத்தில் ஜான்சி ராணி தலைமையில் கடந்த 1857ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடந்த இந்திய கிளர்ச்சிப் போர் குறித்த காட்சிகளும் உள்ளதாம். போர்க்களத்தில் இருந்து சைராவின் வாழ்க்கை வரலாற்றை ஜான்சிராணி விவரிப்பதாகத்தான் படம் ஆரம்பமாகிறதாம்.