வரவேற்புக்கு நன்றி தெரிவித்த விக்ராந்த்

வரவேற்புக்கு நன்றி தெரிவித்த விக்ராந்த்

1 mins read
212086e5-a11c-4672-9f48-ecc40fd05f6f
விக்ராந்த். படம்: ஊடகம் -

'பக்ரீத்' படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு அதன் நாயகன் விக்ராந்துக்கு இரட்டிப்பு உற்சாகத்தை அளித்துள்ளது.

இதையடுத்து ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

விக்ராந்த் நடிப்பில் அண்மையில் வெளியானது 'பக்ரீத்'. இதில் அவருக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். மேலும் பேபி ஸ்ருதிகா, ரோகித் பதாக், மோக்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே உள்ள பாசத்தை விவரிக்கும் படமாக இது உருவாகி உள்ளது. மேலும் ஒட்டகத்தை மையமாக வைத்து வெளியான முதல் தமிழ்ப் படமாகும்.

'பக்ரீத்'துக்கு விமர்சன, வசூல் ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் விக்ராந்தின் நடிப்பையும் விமர்சகர்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.

இதனால் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் விருப்பம் நிறைவேறி இருப்பதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் கூறி வருகிறாராம். இதையடுத்து அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

"'பக்ரீத்' படத்திற்கு செய்தியாளர்கள், பொது மக்கள் அனைவரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

"என்னையும் படக்குழுவினரையும் பாராட்டுகின்றனர். அனைவருக்கும் நன்றி.

"மேன்மேலும் முயற்சி செய்வதற்கும் முன்னோக்கிச் செல்வதற்கும் தேவையான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தமைக்கு நன்றி," என்று விக்ராந்த் பேசும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.