போதைப் பழக்கத்தை தாம் கைவிட்டதைக் குறித்து 'கோலா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படையாகப் பேசினார் பாக்யராஜ். தாம் ஒரு காலத்தில் கஞ்சா பயன்படுத்தி யதையும் அவர் ஒப்புக்கொண்டார். "கஞ்சாவை சிகரெட்டில் கலந்து கொடுத்தனர். ஒரு முறை போதை தலைக்கேறிய போது சிரித்துக்கொண்டே இருந்தேன். அப்போதுதான் நிறைய சாதிக்க நினைத்த நான், இப்படி இருக்கிறோமே என்று மனதில் தோன்றியது. புத்தருக்கு போதி மரம் மாதிரி எனக்கு போதை மரம்தான் புத்தி கொடுத்தது. இப்போது புகைபிடிப்பதையும் நிறுத்திவிட்டேன்," என்றார் பாக்யராஜ்.
வெளிப்படையாகப் பேசிய பாக்யராஜ்
1 mins read
-

