குறைந்த நேரத்தில் பலராலும் பார்க்கப்பட்ட முன்னோட்டக் காட்சி

குறைந்த நேரத்தில் பலராலும் பார்க்கப்பட்ட முன்னோட்டக் காட்சி

1 mins read
314306bb-97c8-4b81-b55d-1d9618450966
'எனை நோக்கி பாயும் தோட்டா' தனு‌ஷ். -

தமிழ்த் திரையின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கௌதம் மேனன். இவரது இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. எப்போதும் அழுக்கு பையனாக, ரௌடியாக, எதிர் வீட்டுப்பையன் போன்ற வேடங்களில் மட்டுமே நடித்து வந்த தனுஷ் இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பணப்பிரச்சினை காரணமாக ஆண்டுகளைக் கடந்து தற்பொழுது செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அழகான காதல் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி அரை மணி நேரத்தில் 'யூடியூப்'பில் 1 லட்சம் வரையில் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும், 14 ஆயிரம் 'லைக்ஸ்' மற்றும் 442 'டிஸ்லைக்ஸ்' வரை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.