விக்னேஷ் சிவனுடன் படத்தில் இணையும் நயன்தாரா

நயன்தாரா தொடர்ந்து கதையின் நாயகியாக நடித்து தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். இவர் அண்மையில் நடிகர் அஜித்துடன் நடித்து வெளிவந்த ‘விஸ்வாசம்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் தற்பொழுது விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

தளபதி விஜய் நடிப்பில் ‘பிகில்’ படத்திலும் அதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் ‘தர்பார்’ படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் திரைப்படம் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா. 10 வருடங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக கோலோச்சி வருகிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளம் பெற்று ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறார். தனி நாயகியாக படங்களில் கலக்கி வரும் இவர், கதாநாயகனுக்கு இணையான வெற்றிகளை பெற்று வருகிறார். இவர் அடுத்து ஒரு ‘திரில்லர்’ படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன.

‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் தற்போது நயன்தாரா படத்தை இயக்கப் போவதாக சொல்லப் படுகிறது. இப்படத்தில் நயன்தராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார்.

மிலிந்த் ராவ் 7 ஆண்டுகளாக இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ‘காதல் டூ கல்யாணம்’ என்ற படத்தை இயக்கினார். 2010இல் எடுத்து முடிக்கப்பட்ட இத்திரைப்படம் இன்றுவரை வெளியாகாமல் உள்ளது. அதன் பிறகு சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகிய ‘அவள்’ என்னும் திகில் திரைப்படத்தை இயக்கினார் மிலிந்த் ராவ். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழி ரசிகர்களிடம் அமோக ஆதரவு பெற்றது.

இந்நிலையில் மிலிந்த் ராவ் தற்போது நயன்தாராவை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்கப் போகிறார். நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் இப்படத்தை தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மூலம் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணையப் போகிறார்கள். பெயரிடப்படாத இப்படத்தைப் பற்றிய செய்திகள் அதிகாரபூர்வ விரைவில் அறிவிக்கப்ப டும் என்று தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!