காட்டுவாசிப் பெண்ணாக நடித்துக்கொண்டிருக்கிறார் இளம் நாயகி அம்மு அபிராமி. 'ராட்சசன்', 'துப்பாக்கி முனை' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் இவர்.
அடுத்து தனுஷுடன் 'அசுரன்' படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர், தற்போது 'அடவி' என்ற படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் தான் காட்டுவாசிப் பெண் வேடம் அமைந்திருக்கிறது.
இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியில் வாழும் காட்டுவாசி மக்களை ஒரு கும்பல் துரத்தியடிக்க முற்படுகிறது. அவர்களை எதிர்த்து அம்மு அபிராமி போராடுகிறார். அவரது போராட்டம் வெற்றி பெற்றதா என்பதுதான் கதையாம். சவாலான வேடம் என்பதால் தயக்கமின்றி நடிக்க ஒப்புக்கொண்டதாகச் சொல்கிறார் அம்மு.

