திரிஷா: சினிமா வெறும் கற்பனையே; ஏமாறாதீர்கள்

திரிஷா: சினிமா வெறும் கற்பனையே; ஏமாறாதீர்கள்

1 mins read
c1da830c-9a3d-4670-b850-9e57a273d123
'யுனிசெப்' அமைப்பின் நல்லெண்ணத் தூதராக செயல்பட்டு வரும் நடிகை திரி‌ஷா, சென்னை 'ஸ்டெல்லா மேரீஸ்' மகளிர் கல்லூரியில் 'யுனிசெப்' சார்பில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். படம்: ஊடகம் -

"திரைப்படம் என்பது கற்பனையே; அதை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்," என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.

நடிகை திரிஷா 'யுனிசெப்' அமைப்பின் நல்லெண்ணத் தூதராக செயல்பட்டு வருகிறார். நேற்று சென்னை 'ஸ்டெல்லா மேரீஸ்' மகளிர் கல்லூரியில் 'யுனிசெப்' சார்பில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, "பெண்கள், குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம். இணையத்தள குற்றங்களில் இருந்தும் குழந்தைகளைப் பாதுகாப்போம். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களைப் பிறரால் புரிந்துகொள்ளமுடியாது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 2014ஆம் ஆண்டு முதல் 2016 வரையில் போக்சோ சட்டத்தின் கீழ் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

"2014ஆம் ஆண்டு 9 ஆயிரமாக இருந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 2016இல் 36 ஆயிரமாக அதிகரித்துவிட்டது. பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்தவர்கள்.

"இளைஞர்கள் இதுகுறித்து பேசவும் செயல்படவும் முன்வரவேண்டும். திரைப்படங்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவை கற்பனை மட்டுமே. அதை பின்பற்றக் கூடாது," என்று மாணவிகளுக்கு அறிவுரை கூறினார்