துணிச்சலான பெண்ணாக நடிக்கும் 'ரவுடி பேபி'

துணிச்சலான பெண்ணாக நடிக்கும் 'ரவுடி பேபி'

2 mins read
5dd26e5c-e5da-4b66-9871-af435028f8c9
-

சாய் பல்லவி மலையாள சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி நடிகையாகிவிட்டார். கதையில் இவருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார். அண்மையில் இவர் தமிழில் 'தியா', 'மாரி 2', 'என்ஜிகே' ஆகிய மூன்று படங்களில் நடித்திருந்தார். அவற்றில் நடிகர் தனுஷுடன் இணைந்து 'மாரி' படத்தில் நடித்ததோடு அந்தப் படத்தில் வரும் 'ரவுடி பேபி' பாடலில் நடன இயக்குநர் பிரபு தேவாவின் பிரமாதமான நடன அசைவுகளை அப்படியே படத்தில் கொண்டு வந்ததன் மூலம் பாடலும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்தப் பாடல் மூலம் நடிகை சாய் பல்லவி தமிழில் பிரபலமானார்.

ஆனாலும் தமிழில் அவருக்குத் தொடர்ந்து படங்கள் கிடைக்காததால் அவர் சோர்ந்து போகாமல் தெலுங்கில் கவனம் செலுத்தத் தொடங்கி அங்கு வெற்றிகளைக் குவித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் இவர் நடித்த 'ஃபிடா' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவரின் மார்க்கெட் பெருமளவிற்கு வளர இந்த படம் முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது பெயரிடப்படாத ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். சேகர் கம்முளா என்ற தெலுங்குப் பட இயக்குநர் அந்த படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் நாக சைதன்யா, சாய் பல்லவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜாதிய வேற்றுமைகள் மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் ஒரு பெண்மணியாக சாய் பல்லவி நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப்படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.