'460 படங்கள் வெளியாகவில்லை'

'460 படங்கள் வெளியாகவில்லை'

1 mins read
14da44e8-5efa-45e4-863f-3e17c7d34982
திரைப்படம் ஆளுமையுள்ள மாநிலமான தமிழகத்தில் திரைப்படம் அழிந்துவிடக்கூடாது என்கிறார் இயக்குநர் சங்கப் பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார். படம்: ஊடகம் -

தமிழ்த் திரையுலகில் 460 படங்கள் திரைக்கு வராமலேயே இருப்பதாக இயக்குநர் சங்கப் பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஒரு விழாவில் அவர் பேசும்போது, "திரைப்படம் ஆளுமையுள்ள மாநிலமான தமிழகத்தில் திரைப்படம் அழிந்துவிடக்கூடாது. தமிழ்த் திரைப்படத்தில் 460 படங்கள் திரைக்கு வராமலேயே இருக்கின்றன. இதனால் கோடிக்கணக்கில் பணம் தேங்கியுள்ளது. திரைப்படத்தில் அதிக வருமானம் பெறக்கூடிய கதாநாயகர்கள் ஒன்றுபட்டுத் திரைத்துறையைக் காக்க முன்வர வேண்டும். அரசு தலையிட்டு சிறிய முதலீட்டுப் படங்களுக்கு 100 திரையரங்குகளை ஒதுக்கித் தரவேண்டும் என்றும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 1,000 பேரோடு சேர்ந்து ஊர்வலமாகச் சென்று அரசுக்கு மனு அளிக்க உள்ளோம்," என்றும் கூறினார்.