முருகேசன் தயாரிப்பில், சுசி.ஈஸ்வர் இயக்கத்தில், சஞ்சய், மேக்னா நடிப்பில் உருவாகி உள்ளது 'தேடு'. இவர் ஏற்கெனவே 'இணைய தலைமுறை'யை இயக்கியவர். கதாநாயகனாக சஞ்சய் நடிக்க, 'உறுதிகொள்', 'வீராபுரம்' ஆகிய படங்களில் நடித்த மேக்னா நாயகியாக நடிக்கிறார். மது மயக்கத்தில் ஒருவர், காதல் மயக்கத்தில் இளம் காதலர்கள், செல்ஃபி மயக்கத்தில் இளம் மாணவ மாணவியர் என முப்பரிமாணத்தில் பயணப்படும் கதையைக் கையாண்டுள்ளாராம் இயக்குநர். "சம்பந்தப்பட்டவர்கள் மயக்கம் கலைந்து, தவறுகள் களைந்து, இலக்கை அடைந்தார்களா? என்பதை விவரித்துள்ளேன். இது இளையர்கள் பார்க்க வேண்டிய படம்," என்கிறார் ஈஸ்வர்.
இளையர்கள் பார்க்க வேண்டிய படமாக உருவாகி உள்ளது - 'தேடு'
1 mins read
சஞ்சய், மேக்னா. படம்: ஊடகம் -

