வைபவ், பல்லக் லால்வானி சேர்ந்து நடிக்கும் படம் 'சிக்சர்'. அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கும் இப்படத்தை தினேஷ் கண்ணன் மற்றும் கே.ஸ்ரீதர் தயாரித்திருக்கிறார்கள். கதைப்படி, நாயகனுக்கு மாலை ஆறு மணிக்கு மேல் கண் தெரியாது. இதனால் நாயகன் சந்திக்கும் கஷ்டங்களை நகைச்சுவையாகக் கூறியுள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தில் தன்னைத் தவறான முறையில் சித்திரித்திருப்பதாகக் கூறி நடிகர் கவுண்டமணி தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அனுமதி பெறாமல் தனது புகைப்படத்தையும் சில படங்களில் தான் பேசிய வசனங்களையும் தவறான முறையில் பயன்படுத்தி உள்ளனர் என்பதே கவுண்டமணியின் குற்றச்சாட்டு.
'சிக்சர்' படத் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய நடிகர் கவுண்டமணி
1 mins read
-

