நிறைய அனுபவம் உள்ள நடிகர்களுடன் பணிபுரிவது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் இளம் நாயகி மெஹ்ரீன். இவர் 'பட்டாஸ்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
தனுஷ் அருமையான நடிகர் என்றும், எந்தவிதமான காட்சியானாலும் ஒரே டேக்கில் நடித்துவிடுகிறார் என்றும் பாராட்டுகிறார்.
"தனுஷிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்கிறேன். எனக்குத் தமிழ் தெரியாது. அதனால் வசனங்களை மனப்பாடம் செய்துதான் பேசுகிறேன்.
"என் காதல் நடிப்பின்மீது மட்டுமே உள்ளது. எனவே எந்த மொழி மாறினாலும் நடிப்பு மாறாது. எந்த மொழியில் நடிப்பதும் எனக்குப் பிடிக்கும்," என்கிறார் மெஹ்ரீன்.
நடிகர்கள் எந்த மொழியில் நடிக்கிறார்களோ, அதைக் கற்பது அவசியம் என்று குறிப்பிடுபவர், ஏற்கெனவே தெலுங்கு மொழியைக் கற்றுள்ளதாகவும் தமிழில் நடிப்பதால் விரைவில் தமிழில் பேச முடியும் என நம்புவதாகவும் சொல்கிறார். 'பட்டாஸ்' படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.

