நடிகர் அஜித். தன்னுடைய மகளுக்காக தான் நடிக்கும் படங்களில் பெண்களைக் கேலி செய்யும் வேடங்களில் நடிக்க முடியாது என்று அறிவித்து இருக்கிறார்.
'அமர்க்களம்' படத்தில் அஜித்தும் ஷாலினியும் இணைந்து நடித்தபோது இருவரும் விரும்பி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
அண்மையில் வெளிவந்த 'விஸ்வாசம்' படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் அனோஷ்காவுக்கு மிகவும் பிடித்துப்போனதாம். அந்தப் படத்தில் தன் மகளுக்காக அஜித் படும் கஷ்டங்களைப் பார்த்து ரொம்பவே நெகிழ்ந்து போன அனோஷ்கா, தன் அப்பாவிடமே அது குறித்து பெரிதும் பாராட்டி இருக்கிறார்.
அதனால் மகிழ்ச்சி அடைந்த அஜித், இனி நடிக்கும் படங்களில் பெண்களைக் கேலி செய்வது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளாராம். எனவே, அதுபோன்ற காட்சிகள் என் படத்தில் இருக்கவே கூடாது என்று இயக்குநர்களிடமும் கறாராக கூறுகிறாராம்.
அதோடு அண்மையில் அவர் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை அடுத்து அவர் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

