காதல் குருவாக மாறிய மொட்டை ராஜேந்திரன்

காதல் குருவாக மாறிய மொட்டை ராஜேந்திரன்

1 mins read
c4fe8a5b-ac41-4740-a57f-34c175cdc8c7
-

'நானும் சிங்கள் தான்' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் தினேஷ். இவரது ஜோடியாக தீப்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளார். அறிமுக இயக்குநர் கோபி இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இதில் லண்டன் வாழ் தமிழராக, நகைச்சுவையில் அசத்தி உள்ளாராம் மொட்டை ராஜேந்திரன். கதைப்படி, அங்கு இயங்கும் தனியார் வானொலி நிலையத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார் ராஜேந்திரன். 'மிஸ்டர்.லவ்' என்ற பெயரில் காதலர்களுக்குப் பல ஆலோசனைகளை வழங்கி உதவுவாராம். "காதலர்களைச் சேர்த்து வைப்பது, பிரிந்துவிட்ட காதலர்களுக்கு ஆறுதல் கூறுவது என்று காதல் குருவாக செயல்படுவார். இந்தக் கதாபாத்திரம் இளையர்களை நிச்சயம் கவரும்," என்கிறார் இயக்குநர் கோபி. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் படம் விரைவில் திரையீடு காண உள்ளது. தினேஷும் தீப்தியும் கூட சில காட்சிகளில் நகைச்சுவை நடிப்பில் அசத்தியுள்ளதாகத் தகவல்.