சுந்தர் சி. நடிப்பில் உருவாகி வருகிறது 'இருட்டு'. இதில் தன்ஷிகா நாயகியாக நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இது திகி
லும் நகைச்சுவையும் கலந்த கதையாம். "இப்படத்தில் பேயைப் பார்க்க முடியாது. பேய்கள் இல்லாத திகில் படம் என்பது ரசிகர்களுக்கு சுவாரசியமாக இருக்கும். இதில் சுந்தர் சி. காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்," என்கிறார் இயக்குநர் துரை.

