விமர்சனத்துக்கு ஆளான அமைரா

விமர்சனத்துக்கு ஆளான அமைரா

1 mins read
a7ad7829-1179-4c47-ad9b-4bc7c66a49c6
-

'அனேகன்' பட நாயகி அமைரா தஸ்தூருக்கு இன்னும் இந்தியில் சரளமாகப் பேச வரவில்லையாம்.

இந்திப் படங்களில் நடிப்பவர் இவ்வாறு இருக்கலாமா? என்று சிலர் அவரை விமர்சித்து வருகின்றனர்.

"நான் பார்ஸி இனத்தைச் சேர்ந்த பெண். எங்கள் வீட்டில் குஜராத்தி, ஆங்கில மொழிகளில்தான் பேசிக் கொள்வோம். அதனால் இந்தியில் நான் தடுமாறுகிறேன்.

"கூடிய விரைவில் இந்தியில் தேறி விடுவேன். இதற்காக என்னை விமர்சிப்பது சரியல்ல," என்கிறார் அமைரா. இவர் தற்போது இந்திப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.