1969இல் 'பாலிவுட்'டில் அறிமுகமானவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் நடித்த முதல் படத்திலேயே சிறந்த புதுமுக நடிகருக்கான தேசிய விருது பெற்றார். தன்னுடைய சிறந்த நடிப்பாலும் விடா முயற்சியாலும் இந்திய திரைப்படத்தின் 'ஜாம்பவான்' என்ற பட்டத்தைப் பெற்றார். உலகம் முழுவதும் இவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் பச்சன் அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய மகனுக்கும் மகளுக்கும் சரிசமமாக பிரித்து தரவுள்ளதாக கூறியிருக்கிறார். அமிதாப் பச்சனுக்கு சுமார் 400 மில்லியன் டாலர் அதாவது 2,800 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளது என்று கூறப்படுகிறது.
இவரது சொத்து விவரம் இப்போதுதான் முதல் முறையாக வெளியாகியுள்ளது. ஒரு முறை சொந்தப் படம் எடுத்து கடனாளியாக மாறியவர் மீண்டும் தன் வயதுக்கேற்ற வேடங்களில் திரைப்படங்களில் நடித்து தற்போது மீண்டும் இத்தனை கோடிக்கு சொந்தக்காரராகியுள்ளார். இவருக்கு இத்தனை கோடி சொத்துக்களா என 'பாலிவுட்' ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

