அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதோடு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் அன்றைய தினத்தில் படங்களை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர் முன்னணி நடிகர்கள். தீபாவளிக்கு நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படத்துடன் விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'சங்கத் தமிழன்', கார்த்தி நடித்திருக்கும் 'கைதி' ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது. அதனால் அந்தந்த படங்களின் தயாரிப்பாளர்கள் அதிகமான திரை அரங்குகளைக் கைப்பற்றும் வேலையில் இறங்கினர். ஏற்கெனவே விஜய் படத்திற்கு பல திரை அரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதால் விஜய் சேதுபதியின் 'சங்கத் தமிழன்' படத்திற்கு முக்கியமான திரை அரங்குகள் கிடைக்கவில்லை. அதனால் தனது படம் வெளியிடும் தேதியை மாற்றும்படி தயாரிப்பாளரிடம் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டாராம். அதனால் போட்டியிலிருந்து 'சங்கத் தமிழன்' வெளியேறியுள்ளது.
விஜய்க்கு வழிவிட்ட விஜய் சேதுபதி
1 mins read
-

