அழகின் ரகசியம் பூப்பந்தாட்டம்தான் என்கிறார் நிவேதா தாமஸ்

அழகின் ரகசியம் பூப்பந்தாட்டம்தான் என்கிறார் நிவேதா தாமஸ்

1 mins read
a3ed6ecc-025b-4600-836a-4635f2141ccd
நிவேதா தாமஸ் -

தமிழில் 'குருவி', 'ஜில்லா', 'பாபநாசம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ், இப்போது ரஜினியுடன் 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் ஆர்வத்துடன் நடிப்பதற்கு அக்கறை காட்டி வரும் நிவேதா, "பூப்பந்தாட்டம் விளையாடுவதே தனது அழகின் ரகசியம்," என்று கூறியுள்ளார்.

டுவிட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள நிவேதா, "பொதுவாக எனக்குப் பிடித்த உணவுகள் அதிகம். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் எனில் பிரியாணி பிடிக்கும்.

"எனக்கு நடிகைகள் தீபிகா படுகோன், கங்கனா ரணாவத் நடித்தது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை உள்ளது. நான் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகை. எங்கு பயணம் போனாலும் அவரது இசையைக் கேட்டுக்கொண்டே செல்வேன். அவரது பாடல்களைக் கேட்டாலே புது சக்தி பிறப்பதுபோல் தோன்றும்.

"எனக்கு நன்றாக சமைக்கத் தெரியும். மழை பெய்யும்போது மசாலா டீயை ருசித்துக் குடிப்பேன்.

"நடிகை ஸ்ரீதேவியை மிகவும் பிடிக்கும். சிறு வயதில் இருந்தே தொலைக்காட்சியில் ரஜினிகாந்த் படங்கள் வந்தால் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பேன். அவரது ஸ்டைல் என்னைக் கவர்ந்த அம்சம். கமல்ஹாசன் நடிப்பும் பிடிக்கும். ஹெல்மெட் போட்டுக்கொண்டு அவ்வப்போது பைக்கை எடுத்துக்கொண்டு இரவில் சுற்றிவருவேன்," என்கிறார் நிவேதா.