பிரபாஸ் நடிப்பில் வெளியான 'சாஹோ' படத்தில் கதாநாயகியாக நடித்த ஷ்ரத்தா கபூரின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற ஒரு சில முன்னணி நடிகைகள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். அவர்களும் நடிக்க வந்து 7, 8 ஆண்டுகளை தொட்ட பின்னர்தான் இந்த சம்பளத்தை தொட்டனர். ஆனால் நடிக்க வந்து 4 படங்களிலேயே சம்பளத்தில் கோடிகளை கடந்துள்ளார் ஷ்ரத்தா கபூர்.
நடிகை ஷ்ரத்தா கபூர், 'டீன் பட்டி' என்ற திரைப்படம் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகம் ஆனார். பின்பு 'லவ் க தி எண்ட்' படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதன் பிறகு காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'ஆஷிகுய் 2' திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றியடைந்து. இந்தி ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டார்.
அதன் பிறகு அவர் காதல் கதை உள்ள படங்களாகவே நடித்து வந்தார். வழக்கமாக இந்தி படங்களில் நடிக்க ரூ. 2 கோடி சம்பளம் வாங்கும் ஷ்ரத்தா 'சாஹோ' படத்துக்கு ரூ. 7 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது. அதைக் கேள்விப்பட்ட மற்ற முன்னணி நடிகைகள் ஷ்ரத்தாவிற்கு அடித்த அதிர்ஷ்டத்தை எண்ணி வியந்துபோய் இருக்கின்றனர்.