ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'காவல்துறை உங்கள் நண்பன்'.
இதில் சுரேஷ் நாயகனாகவும், ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளனர். மைம் கோபி முக்கியமான பாத்திரத்தை ஏற்றுள்ளார். ஆதித்யா, சூர்யா இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விவரிக்கும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது.
ஒரு காவல் அதிகாரிக்கும், உணவு கொண்டு சேர்க்கும் தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கும் இடையேயான சம்பவங்கள், உரையாடல்கள்தான் கதைக் களமாம்.
"மிக கனமான கதையையும் கதாபாத்திரங்களையும் கையாண்டுள்ளோம்.
"ஒவ்வொரு காட்சியும் ஒருவித எதிர்பார்ப்பை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தும்.
"அதே நேரம் மக்களை ஈர்க்கக் கூடிய வகையில் வணிக ரீதியிலான அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்," என்கிறார் இயக்குநர் ஆர்.டி.எம்.
படத்தைப் பார்த்த விநியோகிப்பாளர்கள் திருப்தி தெரிவித்த நிலையில், மொத்த வெளியீட்டு உரிமையையும் ரவீந்தர் சந்திரசேகரன் பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. படம் சிறப்பாக இருப்பதாக அவரும் தெரிவித்துள்ளார்.

