'ஜிப்ஸி' வெளியீட்டில் மீண்டும் முளைத்தது சிக்கல்

'ஜிப்ஸி' வெளியீட்டில் மீண்டும் முளைத்தது சிக்கல்

1 mins read
04119838-082b-40f0-8726-622b27aad488
ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் 'ஜிப்ஸி'. இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடிக்கிறார். -

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் 'ஜிப்ஸி'. இது நாடோடிகள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை அலசும் படைப்பாம். ஆனால் தற்போது இந்தப் படத்தை வெளியிடுவதிலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் சில காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் அளிக்க மறுத்துள்ளனராம். இதையடுத்து மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்ட போதும் சிக்கல் தீரவில்லை. இதையடுத்து மும்பையில் உள்ள தணிக்கைத் தீர்ப்பாயத்தை அணுகியுள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் சில அரசியல் பிரமுகர்களையும் நடப்பு அரசியல் நிலைமையையும் கடுமையாக விமர்சித்து இருப்பதாலேயே தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.