இயக்குநர் ராஜசேகர் காலமானார்

இயக்குநர் ராஜசேகர் காலமானார்

1 mins read
67af8f18-2940-42ac-af48-492180e058bb
பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் உடல் நலக்குறைவால் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். மனசுக்குள் மத்தாப்பூ', 'சின்னப்பூவே மெல்லப் பேசு', 'தூரம் அதிகமில்லை', 'பறவைகள் பலவிதம்', 'தூரத்துப் பச்சை', 'கல்யாணக் காலம்' உள்பட பல படங்களை இயக்கியுள்ளனர். பின்னாட்களில் நடிப்பில் கவனம் செலுத்தி ராஜசேகர், நிறைய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். -

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் உடல் நலக்குறைவால் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

'பாலைவனச் சோலை' படத்தை இயக்கிய ராபர்ட்-ராஜசேகர் என்ற இரட்டையர் இயக்குநர்களில் ஒருவரான இவர், நடிகராகவும் பிரகாசித்தார்.

இந்த இரட்டையர் இயக்குநர்கள் 'மனசுக்குள் மத்தாப்பூ', 'சின்னப்பூவே மெல்லப் பேசு', 'தூரம் அதிகமில்லை', 'பறவைகள் பலவிதம்', 'தூரத்துப் பச்சை', 'கல்யாணக் காலம்' உள்பட பல படங்களை இயக்கியுள்ளனர்.

பின்னாட்களில் நடிப்பில் கவனம் செலுத்தி ராஜசேகர், நிறைய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். அதன் மூலம் சினிமாவைவிட சின்னத்திரை நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் அண்மைக் காலமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை அவர் காலமானார்.