விஜய்யின் சம்பளம் ரூ.80 கோடி

விஜய்யின் சம்பளம் ரூ.80 கோடி

1 mins read
1e9e901d-d17a-4447-91f5-35accaa8e8a9
'தளபதி 64' படத்தில் நடிப்பதற்கு  விஜய்க்கு 80 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. -

'தளபதி 64' படத்தில் நடிப்பதற்கு விஜய்க்கு 80 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ-விஜய் கூட்டணியில் உருவாகிவரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து 'விஜய் 64' படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கவுள்ளதாகவும் விஜய் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவிருப்பதாகவும் ஏற்கெனவே தகவல் வெளிவந்தது. இந்தப் படத்திற்காக விஜய்க்கு ரூ.80 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ள தாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.