ஷ்ரதா: அயர்ந்து தூங்கினால் அழகு கண் சிமிட்டும்

தமிழ், தெலுங்கில் வெளியான ‘சாஹோ’ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து பிரபலமான ஷ்ரதா கபூர், “இயற்கை அழகு என்பது நல்ல தூக்கம். தன்னைத் தானே மறந்து தூங்குபவர்களைப் பார்ப்பதற்குப் பிடிக்கும். சரியான தூக்கம் இல்லை என்றால் எவ்வளவு சிரமப்பட்டும் பயனில்லை.

“ஒருவருக்கு சரியான தூக்கமும் அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கமும் இருந்து விட்டால் அவரிடம் ஆரோக்கி யமும் அழகும் கண்சிமிட்டும்.அலங்காரத்தால்தான் அழகு வரும் என்பதை நம்பமாட்டேன். மேக்கப் இல்லை என்றால்தான் சவுகரியமாகவும் சந்தோஷமாக வும் இருக்கும்,” என்கிறார் ஷ்ரதா.