ஜிவியுடன் ஜோடிபோடும் அழகி

அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த மாடல் அழகி திவ்யபாரதி அவரது ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திவ்யபாரதி கூறுகையில், “நண்பர்களே, ஜிவி பிரகாஷின்  ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதன்மூலம் சினிமாவில் அறிமுகமாகிறேன் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி யடைகிறேன்,” என்றார். 

இப்படத்தின் முதல் தோற்ற காட்சியும் படத்திற்கான பெயரும்  இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதனை இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வெளியிட இருக்கிறார்.

Loading...
Load next