திரிஷாவை காப்பியடிப்பதுபோல் இருக்கக் கூடாது என்பதால் அதிகம் பாடுபடும் சமந்தா

2018ல் தமிழில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற படம் ‘96’. விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த அந்தப் படத்தை தெலுங்கில் ஷர்வானந்த், சமந்தாவை வைத்து மறுபதிப்பு செய்து வருகின்றனர்.

‘96’ படத்தை இயக்கிய பிரேம் குமார்தான் அதை தெலுங்கில் மறுபதிப்பு செய்துகொண்டிருக்கிறார். 96 படத்தைப் பார்த்து பலரும் ராம், ஜானு நினைப்பாக இருந்தனர். அதே உணர்வை தெலுங்கு ரசிகர்களுக்கும் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரேம் குமார்.

தன் திரையுலகப் பயணத்திலேயே இந்த ‘96’ பட மறுபதிப்பு கதாபாத்திரம்தான் மிகவும் கடினமானது என்று நினைக்கிறாராம் சமந்தா. படப்பிடிப்பில் ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் இடையே சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு தயாராகிறாராம் அவர்.

படம் பார்ப்பவர்கள் இது திரிஷாவை காப்பியடித்தது போன்று இருப்பதாகக் கூறிவிடக்கூடாது என்பதற்காக மெனக்கெடுகிறாராம் சமந்தா. இப்படம் முடிந்தவுடன் குழந்தை பெற்றுக்கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.

குழந்தை பெற்று அது கொஞ்சம் வளரும் வரை பிரேக் எடுக்கப் போகிறாராம் சமந்தா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!