பாலிவுட் செல்லும் யோகி பாபு

தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி நாயகனாகவும் வலம் வரும் யோகி பாபு, அடுத்ததாக சூப்பர் ஸ்டார் அமீர் கானுடன் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாரா மீது மையல் கொண்ட யோகி பாபு, இப்போது ‘பிக் பாஸ்’ என்ற புதுப்படத்தில் அஞ்சலி மீது ஆசை கொள்பவராக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர் நாயகனாக நடித்த ‘தர்ம பிரபு’, ‘கூர்கா’ போன்ற படங்கள் ஏற்கெனவே வெளியீடான நிலையில், ‘பன்னி குட்டி’, ‘மண்டேலா’, ‘பப்பி’ போன்ற படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.

ஆஸ்கர் விருதை வென்ற ‘ஃபாரஸ்ட் கம்ப்’ ஹாலிவுட் படத்தின் இந்தி மறுபதிப்பான ‘லால் சிங் சட்டா’வில் அமீர் கான் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு உள்ள நிலையில், யோகி பாபுவிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

இது குறித்து யோகி பாபு கூறுகையில், “அமீர் கான் படத்தில் நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அந்த படத்திற்கு தேதிகள் கொடுக்கமுடியுமா என்பதுதான் தெரிய வில்லை. அந்த அளவுக்கு ஓடியோடி பல படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.

‘லால் சிங் சட்டா’ படத்தில் அமீர்கானின் தமிழ் நண்பராக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுதான் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் பாலிவுட் படம்.

லால் சிங் சட்டா படத்திற்காக அமீர் கான் தனது உடல் எடையை வெகுவாக குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

படத்திற்கு படம் உடல் எடையைக் குறைப்பதும் கூட்டு வதுமாகவே இருந்து வருகிறார் அமீர்கான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!