இரண்டு படங்களைத் தயாரிக்கும் கார்த்திக் சுப்புராஜ்

இரண்டு படங்களைத் தயாரிக்கும் கார்த்திக் சுப்புராஜ்

1 mins read
3469af0d-0b00-477b-bbbe-803984c01a35
-

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் இரண்டு படங்களை ஒரே சமயத்தில் தொடங்கியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் படத்தை ஈஸ்வர் கார்த்திக் என்ற புதுமுகம் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் ஆரம்பமானது. ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் படத்தை ரதீந்தின் ஆர் பிரசாத் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.

தற்போது தனுஷ் நடிக்கும் படத்தை லண்டனில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இதனால் அவர் துவக்க விழாவில் கலந்து கொள்ளாமலேயே இந்த இரண்டு கதாநாயகிகள் படங்களும் ஒரே வாரத்தில் ஆரம்பமாகியுள்ளன.