அஜித்தின் மகளாக மீண்டும் அனிகா

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு மகளாக அனிகா நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற பாடல் பெரும்பாலான ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது.

இந்த படத்தை அடுத்து அப்பா - மகள் பாசத்தை மையப்படுத்தி உருவான ‘விஸ்வாசம்’ படத்திலும் அனிகா அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.

தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 60வது படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தே தனது 60வது படத்தில் அனிகாதான் மகளாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு ஒரு முக்கியமான காரணம் கூட இருக்கிறது என்று கூறப்படுகிறது.

‘தல’ அஜித்தின் மகள் அனோஷ்காவிற்கு அனிகா நெருங்கிய தோழியாம். இதன் காரணமாக, அவ்வப்போது அஜித்தின் வீட்டிற்கு அனிகா சென்று வருவாராம்.

அனோஷ்கா மட்டுமல்லாமல் ஷாலினிக்கும் அனிகாவும் செல்லப்பிள்ளையாம். இதன் காரணமாக, அஜித் தனது படங்களின் வெற்றிக்கு அனிகாவை ஒரு ராசியாகக் கருதுகிறாராம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!