நடிகை கனிகாவை தமிழ்ச் சினிமா ரசிகர்கள் மறந்து போயிருக்க வாய்ப்புண்டு. நீண்ட காலமாக கோடம்பாக்கம் பக்கம் அவரைக் காண முடியவில்லை.
கடைசியாக கடந்த 2006ஆம் ஆண்டு அஜித்தின் 'வரலாறு' படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கனிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
"''பைவ் ஸ்டார்' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானேன். பிறகு முன்னணி நாயகிகளுக்குப் பின்னணி குரல் கொடுத்து வந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிப்பது மகிழ்ச்சி தருகிறது," என்கிறார் கனிகா.

