அதிதி நடிப்பில் உருவாகும் ‘படவெட்டு’

நிவின் பாலிக்கு ஜோடியாக மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் அதிதி பாலன்.

‘அருவி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், உடனடியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டும் என அவசரப்படவில்லை. நல்ல கதை அமைந்தால் மட்டுமே நடிப்பது குறித்து யோசிக்க முடியும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் லிஜோ கிருஷ்ணா இயக்கத்தில், நிவின் பாலி நாயகனாக நடிக்கும் படத்துக்காக நாயகியைத் தேடும் படலம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. அப்போது அதிதி பாலன் குறித்து உதவி இயக்குநர் சொன்னதைக் கேட்ட லிஜோ, உடனடியாக அவரைத் தேடிச் சென்றாராம்.

அதிதிக்கும் கதை பிடித்துப் போக, உடனே  கால்ஷீட் தந்திருக்கிறார். இந்தப் படத்துகுக்கு ‘படவெட்டு’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

“கதை கேட்பதில் மட்டுமே அதிதி கவனம் செலுத்தினார். சம்பளம் குறித்து பேசவே இல்லை,” எனப் பாராட்டுகிறார் லிஜோ.

தமிழிலும் இப்படத்தை வெளியிட வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளனராம்.