ஆர்யா ஒரு பிறவிக் கலைஞன் என்கிறார் மகிமா

ஆர்யா ஒரு பிறவிக் கலைஞன் என்கிறார் மகிமா

1 mins read
a81b421c-82c4-4acd-8b99-d1b733f07239
'மகாமுனி' காட்சியில் ஆர்யா, மகிமா நம்பியார். படம்: ஊடகம் -

ஆர்யா போன்ற ஒரு அபூர்வமான நடிகரைப் பார்க்கமுடியாது. அவரை ஒரு பிறவிக் கலைஞன் என்றே சொல்லலாம் என்று புகழ்ந்து கூறியுள்ளார் மகிமா நம்பியார்.

ஆர்யா இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்து, சாந்தகுமார் இயக்கிய 'மகாமுனி' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதில் படத்தின் கதாநாயகி மகிமா நம்பியாருக்கு பெரும் மகிழ்ச்சி.

'மகாமுனி' படத்தைப் பற்றியும் ஆர்யாவுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்தது பற்றியும் மகிமா உற்சாகத்துடன் கூறியபோது, "என் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்துவிட்டது 'மகாமுனி'. திரையில் பார்க்கும்போது எனக்கே வியப்பாக இருந்தது.

"நான் நடிக்கவேண்டிய காட்சிகளை ஆர்யாவே நடித்துக் காட்டினார். என் நடிப்பு சிறப்பாக இருந்தால்தான் எதிரில் நிற்கும் அவரது நடிப்பு எடுபடும் என்று சொல்வார். இப்படி மெனக்கெடும் நடிகரை நான் பார்த்ததில்லை.

"என் அடுத்த படமாக விக்ரம் பிரபு வுடன் நடித்துள்ள 'அசுரகுரு' வெளிவர உள்ளது," என்று கூறினார் மகிமா.