'சேதுபதியின் தெலுங்கு பேசும் அழகே அழகு'

'சேதுபதியின் தெலுங்கு பேசும் அழகே அழகு'

1 mins read
d5617670-13a8-45d1-be33-321c9f082573
சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி உள்ள 'சைரா நரசிம்ம ரெட்டி' சுவரொட்டி. -

இதுவரை தமிழ் பேசி நடித்து வந்த விஜய் சேதுபதி இப்போது 'சைரா நரசிம்ம ரெட்டி' என்ற தெலுங்கு மொழிப் படத்தில் தெலுங்கில் பேசி நடித்துள்ளார். "அவர் தெலுங்கு பேசும் அழகே அழகு," என்று ரசிகர்கள் வியந்து பாராட்டி உள்ளனர்.

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி உள்ளது 'சைரா நரசிம்ம ரெட்டி' திரைப்படம்.

இப்படத்தில் சைரா நரசிம்ம ரெட்டியாக தெலுங்குத் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார்.

அவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, கிச்சா சுதீப் ஆகியோரும் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று உலகம் எங்கும் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று வெளியானது. சரித்திரப் பின்னணியுடன் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் காட்சிகள் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளன.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி களில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார்.