'விருது மட்டுமே இலக்கல்ல; சம்பளமும் முக்கியம்தான்'

'விருது மட்டுமே இலக்கல்ல; சம்பளமும் முக்கியம்தான்'

2 mins read
72f2bae3-48da-4b5e-b5a1-a8da4d2f4a85
நடிகை பூர்ணா -

இப்போது 'புளூவேல்', 'காப்பான்' படங்களில் நடித்திருக்கும் நடிகை பூர்ணா, "நான் விருதுக்காக மட்டுமே நடிக்கவில்லை. சம்பளமும் எனக்கு முக்கியம்தான்," என்று கூறியுள்ளார்.

'சவரக்கத்தி' படத்தில் தனது முழுத் திறமையைக் காட்டிய பூர்ணா இதையடுத்து 'புளூவேல்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், "குறைந்த செலவில் எடுக்கப்பட்ட 'புளூவேல்' படம் 'புளூவேல்' விளையாட்டு பற்றிய விழிப்புணர்வுப் படமாக இருக்கும். போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். இதில் அதிரடி காட்சிகளை விட உணர்வுபூர்வமான காட்சிகள்தான் அதி கம். ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளேன். "காப்பான்' படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக வருகிறேன். சில காட்சிகள்தான் என்றாலும் திருப்தியான பாத்திரமாக அமைந்தது. என் கதாபாத்திரத்துக்கு நானே குரல் கொடுத் துள்ளேன். பெரிய படங்களில் நடிக்கும் ஆசை இதன்மூலம் நிறைவேறியுள்ளது.

"நான் அறிமுகமானதும் தொடக்கத்தில் நடித்ததும் கதாநாயகியாகத் தான். ஆனால் அண்மைக்காலமாக நாயகியாக மட்டும்தான் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை.

"நல்ல பாத்திரமாக இருந்தால் சிறிய கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்குத் தயங்குவது இல்லை. ஒரு படம் என்றால் எல்லா கதாபாத்திரங்களுமே முக்கியம்தான். சில சமயங்களில் நாயகியைவிடவும் ஒருசில பாத்திரங்கள் நல்ல பெயரை வாங்கிவிடும்.

"கன்னடம், தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடிக்கிறேன். தமிழில் வைபவ்வுடன் ஒரு படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடிக்கிறேன்.

"நான் விருதுக்காக மட்டுமே நடிக்கவில்லை. சம்பளமும் முக்கியம்தான். இப்போது சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கும்போது சில நாட்கள்தான் படப்பிடிப்பு என்பதால் நல்ல சம்பளம் கிடைக்கிறது. வாழ்நாள் முழுக்க சினிமாவில் நிலைத்திருக்க ஆசை. ஆனால் எனக்கு அமையும் குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தே அது இருக்கும். 'காப்பான்' படத்துக்காக என்னை அணுகும்போதே எனது நடிப்புக்காகத்தான் அணுகினார்கள். இதுபோல் பெயர் எடுக்கவே ஆசைப்படுகிறேன்.

"திருமணம் அவசியமான ஒன்று. அதற்குத் தயாராகவே இருக்கிறேன். ஆனால் சரியான நேரத்தில் செய்யவேண்டும். கடவுள் சரியான நேரத்தைக் காட்டு வார். சென்னையில் நிச்சயம் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும்," என்கிறார் பூர்ணா.