‘கல்யாண வீடு’ சர்ச்சை காட்சி: சன் டிவியின் விளக்கத்தைக் கேலி செய்யும் இணையவாசிகள்

 சன் டிவி ஒளிவழியின் ‘கல்யாண வீடு’ நாடகத்தொடரில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சில காட்சிகள் குறித்து 2.5 லட்சம் ருபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மே 14, 15 மற்றும் ஜூன் 28 ஆகிய தேதிகளில் ஒரு பெண் கதாபாத்திரம் குண்டர்கள் சிலரை ஏவி, தனது சொந்தத் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்யும்படி அமைந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. குண்டர்கள் ஒருவரை அடுத்து ஒருவர் இந்த வன்புணர்வில் ஈடுபட்டதை இந்த நாடகம் மிகவும் நாராசமான முறையில் காட்டியதாகத் தொலைக்காட்சி நேயர்கள் சிலர்  இந்தியாவின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளடக்கப் புகார்கள் மையத்துக்கு (பி.சி.சி.சி) புகார் அனுப்பினர். 

‘கல்யாண வீடு’ குடும்பப் பண்புகளையும் பெண்களின் பண்புகளையும் எடுத்துரைக்கும் புனைவு நாடகம் என்று கூறி சன் டிவி நியாயப்படுத்த முயன்றது. ஆனால் இந்த விளக்கத்தை  ஏற்க மறுத்த புகார்கள் மையம், அந்நிறுவனத்திற்கு  ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்தது.

தன்னைத் தற்காத்துக்கொள்வதற்காக சன்டிவி அளித்திருந்த விளக்கத்தை  இணையவாசிகள் பலரும் கிண்டலடித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தற்போது ‘96’ தெலுங்கு படப்பிடிப்பு முழுமையடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சமந்தா தனது ‘இன்ஸ்டகிராம்’ பதிவில் “படப்பிடிப்பு முடிந்தது. கடந்த காலங்களைவிட இன்னும் சிறப்பாகச் செயல்பட எனக்குச் சவால்விடும் மற்றொரு முக்கியமான படம் இது. இந்தப் படத்தின் கதாபாத்திரமும் எனக்கு சவாலாகவே இருந்தது. 

15 Oct 2019

‘எனக்கு சவாலான படமாக இருந்தது’

கடனை அடைத்துவிட்டு, அதிலிருந்து முற்றிலுமாக மீண்டுவருகிறார் சசிகுமார். படம்: ஊடகம்

15 Oct 2019

கடனை அடைக்க 8 படங்களில் இடைவிடாது நடிக்கும் சசிகுமார்