நாகார்ஜுனாவின் வீட்டில் சடலம்

தெலுங்குத் திரை நட்சத்திரம் நாகார்ஜுனாவுக்குச் சொந்தமான வீடு ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியிலுள்ள அந்த வீட்டில் புதன்கிழமை இரவு சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். 

கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த வீட்டின் நிலத்தில் பயிர்களை வளர்க்க முடியுமா என்பதை ஆராய அந்நடிகர் அனுப்பிய சில ஆட்கள், வீட்டின் ஓர் அறையில் சடலம் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

சடலம் ஆணா அல்லது பெண்ணா என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இதன் தொடர்பில் கேஷம்பேட்டு நகரில் போலிஸ் புகார் செய்யப்பட்டது. உயிரிழந்தவர் யார், அவருக்கு இந்தக் கதி எப்படி நேர்ந்தது உள்ளிட்ட விவரங்களை போலிசார் கண்டுபிடிக்க முயல்கின்றனர்.