‘நாடோடிகள்-2’

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. ஒரு நண்பனின் காதல் கைகூட தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் நண்பர்களின் கதையை உணர்வுபூர்வமாக முதல் பாகத்தில் சொல்லி இருந்தார் இயக்குநர் சமுத்திரகனி. இவர் இயக்கும் இரண்டாம் பாகத்திலும் சசிகுமார்தான் நாயகன். இவருக்கு ஜோடியாக நடிப்பவர் அஞ்சலி. மேலும் அதுல்யா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், பரணி ஆகியோரும் உள்ளனர். நமீதா என்ற திருநங்கை முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் உணர்ச்சிகரமாகப் பேசினார் சமுத்திரகனி. “ஆண்பால், பெண்பால் தாண்டி, மூன்றாம் பால் இனத்தவர் இந்த சமுதாயத்தில் சந்திக்கும் இன்னல்களை இப்படத்தில் பதிவு செய்துள்ளோம். நமீதாவின் நடிப்பு ரசிகர்களின் மனதை நெகிழவைக்கும்,” என்றார் சமுத்திரனி. “இப்படத்துக்குப்  பின் திருநங்கைகள் மீது பெரிய மரியாதை ஏற்படும்,” என சசிகுமார் கூறினார்.