விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் 'சங்கத்தமிழன்' திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 22ஆம் தேதி) காலை நிலவரப்படி, இந்தத் திரை முன்னோட்டம் 1,728,847 பார்வைகள் ஈர்த்துள்ளது.
பரோட்டா சூரி தனது வழக்கமான ஆடம்பரமற்ற நகைச்சுவையால் கவர்கிறார்.
முன்னோட்ட காட்சியில் கண்ணியமான, அதிரடி காட்டும் போலிஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி வலம் வருகிறார். கவன் படத்திற்குப் பிறகு அரசியல்வாதிகளை நேரடியாக எதிர்த்து மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் மக்கள் செல்வனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. முன்னோட்டக் காட்சி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் அக்டோபர் வெளியீடு என்று அறிவித்துள்ளார்கள்.

