'தலைவி' திரைப்படத்திற்கு ஹாலிவுட் ஒப்பனை கலைஞர்கள்

'தலைவி' திரைப்படத்திற்கு ஹாலிவுட் ஒப்பனை கலைஞர்கள்

1 mins read
4ce4848f-83e5-40a5-89ea-6f896bfddaf5
-

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இயக்குநர்கள் நான், நீ என்று போட்டி போட்டனர். ஆனால், இயக்குநர் ஏ.எல்.விஜய், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'தலைவி' என்ற பெயரில் படமாக உருவாக்கவுள்ளதாக அறிவித்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இதில் ஜெயலலிதாவாக, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்திற்காக முழுவதுமாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தயாராகி வருகிறார் கங்கனா. இதற்காகவே பரதநாட்டியம் மற்றும் தமிழ் மொழியினையும் கற்று வருகிறார் அவர். மேலும் ஜெயலலிதா போலவே தோற்றம் தரவும் கங்கனா பெரு முயற்சி எடுத்து வருகிறார்.

அவரது தோற்றங்களை ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ் வடிவமைக்கவுள்ளாராம். இவர் ஏற்கெனவே கேப்டன் மார்வல், பிளேட் ரன்னர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான முக ஒப்பனை சோதனைக்காக கங்கனா அமெரிக்கா சென்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது சகோதரி ரங்கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "கங்கனா தனது ஒவ்வொரு படத்தையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வார். இந்தப் படத்திற்கு மற்ற படங்களையும்விட அதிகளவில் தனது உழைப்பைக் கொடுத்து வருகிறார்.

"முக ஒப்பனை சோதனையைப் பார்த்த எங்களுக்கே மிகவும் மூச்சுத் திணறக்கூடிய அளவில் இருந்தது. ஆனால் கங்கனா மிகவும் அமைதியாக இருந்தார்," என்று குறிப்பிட்டுள்ளார்.