சமுத்திரகனி என் குடும்பத்தை உறுப்பினர்களுள் ஒருவர். பல நேரங்களில் எனக்கு பெரிய அளவில் ஆறுதலாக இருந்தவர். அதனால், இப்பட வாய்ப்புக்காக அவருக்கு நன்றி சொல்லவேண்டாம் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை அஞ்சலி.
சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி நடிப்பில் 'நாடோடிகள் 2' திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.
முதல் பாகத்தில் நடித்த சசிகுமார், பரணி, நமோ நாராயணன் ஆகியோரைத் தவிர 2ஆம் பாகத்தில் பலரும் புதியவர்கள்.
இப்படத்தில் 'செங்கொடி' என்ற பாத்திரத்தில் நடித்துள்ள அஞ்சலி செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "நாடோடிகள் 2' திரைப்படம் எனது திரை வாழ்க்கையில் முக்கியமான படம்.
"இரண்டாம் பாகத்தில் நடிக்க சமுத்திரகனி கேட்டபோது நான் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டேன். இந்தப் படத்தில் நாயகி கதா பாத்திரமும் வலுவாக இருக்கும்.
"பொதுவாக 2ஆம் பாகத்தை உருவாக்கும்போது முதல் பாகத்தின் பெயரை சிதைக்காமல் களம் அமைக்கவேண்டும்.
"10 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்த படம் 'நாடோடிகள்'. அந்த நற்பெயரை 2ஆம் பாகத் திரைக்கதை நிச்சயம் காப்பாற்றும்.
"நடப்பு விஷயங்களைச் சமூக அக்கறையோடு பிரதிபலிக்கும் இப்படத்தில் எனக்கு சண்டைக்காட் சிகள் உள்ளன. ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் எனக்கு நிறைய சண்டைகள் சொல்லிக்கொடுத்தார். நானும் குதித்து குதித்து சண்டை போட்டுள்ளேன். எல்லாம் பிரமாதமாக வந்துள்ளன," என்றார் அஞ்சலி.

