சூரி: லாரி கிளீனராக சிரமப்பட்டேன்

சூரி: லாரி கிளீனராக சிரமப்பட்டேன்

1 mins read
4da7959d-d6ff-48e9-843a-cac52facb117
சூரி -

சினிமாவுக்கு வரும்முன் நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல என்று கூறியுள்ளார் நகைச்சுவை நடிகர் சூரி.

அவர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். அண்மைய பேட்டி ஒன்றில் சூரி தான் சினிமாவுக்கு வருவதற்கு முன் பட்ட கஷ்டம் குறித்துப் பேசியுள்ளார்.

குடும்பத்தில் வறுமை நிலவிய நிலையில் சினிமாவில் நன்றாக சம்பாதிக்கலாம் என எண்ணி சென்னைக்குப் போய் பலரையும் சந்தித்து வேலை கேட்டேன். ஆனால் யாரும் வேலை தரவில்லை. அப்போது வீட்டு வாடகை கொடுக்கவேண்டும், அதனால் குப்பை மண் அள்ளும் ஒரு லாரியில் கிளீனராகப் பணிக்குச் சேர்ந்தேன்.

ஒருமுறை அம்மா என்னிடம் போனில் பேசும்போது 'சாப்பிட்டியா?' என கேட்டார். 'நான் எங்க சாப்பிட்டேன். பச்சைத் தண்ணி குடித்துவிட்டு படுத்திருக்கேன்' எனச் சொன்னேன். கதறி அழுதவர், மயங்கி விழுந்துவிட்டார் என்றார் சூரி.