பிறந்த நாளன்று பாடல் வெளியீடு

பிறந்த நாளன்று பாடல் வெளியீடு

1 mins read
adaac859-b659-40d6-877c-35d43c616351
-

விக்ரம் மகன் துருவ் தனது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் 'வர்மா' படத்தின் இரண்டாவது பாடலை அப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Watch on YouTube

ஏற்கெனவே இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் துருவுக்கு ஜோடியாக பனிதா ஷாந்துவும், முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் பிரியா ஆனந்தும் நடித்துள்ளனர்.

ரதன் இசையமைப்பில் பாடல்கள் அருமையாக வந்துள்ளதாக சொல்கிறார் இயக்குநர். நவம்பரில் இப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று வெளியான பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாம்.